கிளிநொச்சி - முழங்காவில் 40,000 போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது !

user 31-Jan-2025 இலங்கை 185 Views

கிளிநொச்சி - முழங்காவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40,000 போதைப் பொருள் மாத்திரைகளை யாழ்ப்பாண போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

 யாழ்ப்பாண போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது போதைப்பொருட்களுடன் 5 சந்தேக நபர்களை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக முழங்காவில் பொலிஸார் சந்தேக நபர்கள ஐவரையும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்திய பொழுது எதிர்வரும் 06.01.2025 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related Post

பிரபலமான செய்தி