மன்னார் நீதிமன்ற வளாகம் முன்பாக சற்றுமுன் துப்பாக்கிச்சூடு !

user 16-Jan-2025 இலங்கை 317 Views

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக  இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இருவர் உயிரிழந்துள்ளனர். 

வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

இதன்போது, மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியாசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்தநிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் படுகாயமடைந்த இரு ஆண்கள் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இதன் போது வழக்கு அலுவல் ஒன்றுக்காக நீதிமன்றத்துக்கு வருகை தந்த மூவர் துப்பாக்கிச் சூடுபட்டு படுகாயமடைந்துள்ளனர். 

காயமடைந்த மூவர் ஆபத்தான நிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் குறித்து மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

 

Related Post

பிரபலமான செய்தி