சர்ச்சையில் வேலன் சுவாமிகள்!

user 20-Feb-2025 இலங்கை 141 Views

கடந்த பௌர்ணமி தினத்தன்று நடைபெற்ற சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்கு வேலன் சுவாமிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இன்றைய தினம்  (20) பலாலி காவல்துறை நிலையத்திற்கு, நண்பகல் 12 மணிக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரையானது மக்களது காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்ட நிலையில், அந்த விகாரைகயை அகற்றுமாறு கோரி குறித்த போராட்டம் நடத்தப்பட்டது.

இதேவேளை, இந்த போராட்டத்திற்கு காணி உரிமையாளர்கள் உட்பட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாலும் ஆதரவு தெரிவிக்கபட்டது.

அத்தோடு, இதே விவகாரத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் அழைப்புக் கட்டளை விடுக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Related Post

பிரபலமான செய்தி