கனடாவிற்கு அனுப்புவதாக கூறி வவுனியாவில் பாரியளவில் மோசடி !

user 10-Dec-2024 இலங்கை 813 Views

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 1 கோடி 10 இலட்சம் ரூபாய் பணத்தை 16 பேரிடம் பெற்று மோசடி செய்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடக்கு மாகாணத்தின் வவுனியா, மன்னார், மாங்குளம், கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வசித்து வந்தவர்களிடம், நபர் ஒருவர் கனடாவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு வேலைக்கு அனுப்புவதாகவும், முதல் கட்டமாக ஒரு தொகைப் பணத்தை தருமாறும், மிகுதிப் பணத்தை கனடா சென்று வேலை செய்து கொடுக்கலாம் எனவும் கூறி பணம் பெற்றுள்ளார்.

குறிப்பாக ஒவ்வொருவரிடமும் 5 இலட்சம் தொடக்கம் 10 இலட்சம் ரூபாய் வரை பணம் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட 16 பேர் வவுனியா பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் 16 பேரிடமும் சிறு சிறு தொகையாக பெற்று 1 கோடி 10 இலட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். மேலதிக விசாரணையின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்தியதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 

 

Related Post

பிரபலமான செய்தி