கனடாவில் பனிப்பொழிவு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

user 24-Dec-2024 இலங்கை 822 Views

கனடா(Canada)-ரொறன்ரோவில் பனிப்பொழிவு தொடர்பில் பொதுமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறி்த்த விடயத்தை கனேடிய சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறிப்பாக ரொறன்ரோ(Toronto) உட்பட சில பகுதிகளில் போக்குவரத்துகளை மேற்கொள்வது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும் எனவும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, சில இடங்களில் ஐந்து முதல் பத்து சென்ரிமீட்டர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும், வாகன சாரதிகள் வீதியை பார்ப்பதில் சிரமங்கள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Related Post

பிரபலமான செய்தி