யாழ். வலி - வடக்கு மக்கள் காணி விடுவிப்பு !

user 21-Feb-2025 இலங்கை 124 Views

யாழ். (Jaffna) வலி - வடக்கில் காவல்துறை மற்றும் முப்படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படுவதுடன், விடுவிக்கப்படும் காணிகளில் மக்கள் குடியிருப்புக்களை நிர்மாணித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென கடற்றொழில் 
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று (20.02.2025) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சுசார் குழு கூட்டம் நடைபெற்றது.

இங்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், “யாழ். வலி - வடக்கில் 2009 ஆண்டு காவல்துறை மற்றும் முப்படையினர் வசம் 23 ஆயிரம் ஏக்கர் காணி காணப்பட்டது. இக்காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வந்தன.

இதற்கு குடியிருப்பு இல்லையென்ற காரணம் சொல்லப்படுகின்றது.எனவே விடுவிக்கப்பட்ட காணிகளில் வீடு கட்டிக் கொள்ள அனுமதிக்க முன் வர வேண்டும்.

அத்துடன் பலாலி - வசாவிளான் சந்தி வரையான வீதி மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பவேண்டும்.

மேலும் முல்லைத்தீவு கேப்பாபிலவு காணி விடுவிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையையும் கடற்றொழில் 
அமைச்சர் முன்வைத்த நிலையில் கூட்டத்தில் கலந்துக் கொண்ட இராணுவ உயர் அதிகாரிகள் விடுவிக்கப்பட்ட பகுதிகளை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக குறிப்பிட்டனர்.

Related Post

பிரபலமான செய்தி