வடக்கு கிழக்கு பகுதியில் ஆபத்தாக மாறும் பெரும் புயல் !

user 28-Nov-2024 இலங்கை 1714 Views

கடந்த 23ஆம் திகதி வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் புயலாக உருமாற வாய்ப்புள்ளதால் வடக்கு கிழக்கு பகுதிகள் மேலும் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கு இடைப்பட்ட பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 90 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையம் காணப்படுகின்றது.

இது புயலாக மாறினால் தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடக்கின் 5 மாவட்டங்களிலும் கிழக்கில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திலும் பெய்து வரும் கனமழை இன்று நண்பகல் வரை தொடர்வதற்கான வாய்ப்புள்ளது.

அத்துடன், இந்த தாழமுக்கம் புயலாக மாற்றமடைந்த பின்னர் கடற்கரையோரங்களில் மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனக் கூறப்படுகின்றது.

Related Post

பிரபலமான செய்தி