மலையக மக்கள் முன்னணியில் மறுசீரமைப்பு நடவடிக்கை ஆரம்பமாகும் !

user 02-Jan-2025 இலங்கை 101 Views

மலையக மக்கள் முன்னணியில் மறுசீரமைப்பு நடவடிக்கை விரைவில் ஆரம்பமாகும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் பெ.சந்திரசேகரனின் 15ஆவது சிரார்த்த தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“மலையக மக்கள் முன்னணி தனித்துவமான கட்சியாகும். அக்கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டும் என மக்கள் தரப்பினரிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கமைய விசேட குழு ஒன்றை அமைத்திருந்தோம். அந்த குழுவினால் முன்வைக்கப்படும் பரிந்துரைக்களுக்கமைய எதிர்வரும் பொங்கலுக்கு பின்னர் மறுசீரமைப்பு பணி இடம்பெறும்.

அத்துடன், உள்ளுராட்சி சபை தேர்தல் தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளோம். அத்தேர்தலை மலையக மக்கள் முன்னணி தனித்து எதிர்கொள்ள வேண்டும் என கட்சி உறுப்பினர்கள் சிலர் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

அந்த கோரிக்கைகள் குறித்தும் பரிசீலித்து வருகின்றோம். நாடாளுமன்ற தேர்தலில் சில மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாது செய்யப்பட்டது.

நுவரெலியா மாவட்டததில் சிந்தித்து வாக்களித்திருந்தால் இன்னும் இரு தமிழ் பிரதிநிதிகளை தெரிவு செய்திருக்கலாம்” என்றார்.

 

 

 

 

Related Post

பிரபலமான செய்தி