வவுனியாவில் எலிக்காய்ச்சலால் 41 பேர் பாதிப்பு !

user 06-Jan-2025 இலங்கை 377 Views

வவுனியாவில் கடந்த 2024 ஆம் ஆண்டு 41 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.

வவுனியாவைப் பொறுத்தவரை சிறுபோகம் மற்றும் பெரும் போகம் போன்ற நெற் பயிற்செய்கை காலங்களில் எலிக்காய்ச்சல் தொற்று கடந்த காலங்களில் குறிப்பிட்டளவு பதிவாகியிருக்கிறது.

இருப்பினும், 2024 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் டிசம்பர் வரை 41 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து தற்போது வீடுகளுக்கு சென்றுள்ளனர் எனவும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.  

Related Post

பிரபலமான செய்தி