செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி தொடர் போராட்டம்

user 25-Jun-2025 இலங்கை 55 Views

யாழ்ப்பாணம் - செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி "அணையா விளக்கு" தொடர் போராட்டம் இன்றைய தினம் (24) இரண்டாம் நாளாகவும் தொடர்கிறது.

செம்மணி பகுதியில் அமைந்துள்ள யாழ் வளைவை அண்மித்த பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இப்போராட்டம் ஆரம்பமானது.

நேற்று மாலை செம்மணி தொடர்பான கதை வாசிப்பும், இரவு நிகழ்வாக ஆவணப்படம் திரையிடலும் இடம்பெற்ற நிலையில் இன்றைய தினமும் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

போராட்டத்தில் ஏற்றப்பட்டுள்ள அணையா விளக்குக்கான எண்ணெய், மலர் அஞ்சலி செலுத்துவதற்கான மலர்கள் என்பவற்றை தந்து உதவுமாறு மக்களிடம் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related Post

பிரபலமான செய்தி