காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை தொடர்பில் முக்கிய அறிவிப்பு !

user 02-Jan-2025 இலங்கை 865 Views

காங்கேசன்துறைக்கும் - நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்றையதினம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் 6ஆம் திகதி மீண்டும் இந்த கப்பல்  சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

குறித்த கப்பல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்த  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

காலநிலை சீரின்மை காரணமாக காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவையானது இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் இன்றையதினம் பயணிகள் கப்பல் சேவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் காலநிலை சீரின்மை காரணமாக இன்றையதினம் கப்பல் சேவை இடம்பெறாது என்றும், எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதியே பயணிகள் கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்படும் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

பிரபலமான செய்தி