தொடர்ச்சியான செயல்பாட்டு நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ இன்று (08) காலை நிலவரப்படி சுமார் 500 விமானங்களை இரத்து செய்தது.
பாதிக்கப்பட்ட பெரும்பாலான வழித்தடங்களில் டெல்லி (152) மற்றும் பெங்களூரு (121) ஆகியவை அடங்கும்.
இதனிடையே, பெரிய அளவிலான இடையூறுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, விமான நிறுவனத்திற்கு அதன் குளிர்கால அட்டவணை விமானங்களில் 5 சதவீதத்தைக் குறைக்க உத்தரவிட்டுள்ளது.
ஆரம்பத்தில் விமான நிறுவனத்திற்கு 6 சதவீத உயர்வு வழங்கப்பட்டிருந்தாலும், இண்டிகோ அதன் செயல்பாடுகளை திறம்பட நிர்வகிக்க தவறியமையினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.