துருக்கியில் (Turkey) உள்ள 12 அடுக்குமாடி ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 76 பேர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கியின் பொலு மாகாணத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் நேற்று அதிகாலை குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது, குறைந்தது 76 பேர் உயிரிழந்துள்ளதுடன் 51 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
விபத்தின் போது, தப்பித்து கொள்வதற்காக பலர் ஜன்னல்கள் வழியாக குதிக்க முயன்றுள்ள நிலையில் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விபத்து ஏற்பட்டு சுமார் ஒரு மணிநேரத்திற்கு பின்னர் சம்பவ இடத்தை அடைந்த தீயணைப்பு படையினர் தீயிணை கட்டுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், விபத்தில், உயிரிழந்தவர்களில் 45 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், உணவகத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளதுடன், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் துருக்கியின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.