இலங்கைக்கு ஊழல் அற்ற நிலைமைவேண்டும் !

user 18-Nov-2024 இலங்கை 325 Views

இலங்கைக்கு ஊழல் அற்ற, வன்முறைகள் அற்ற ஒரு நிலைமைவேண்டும் என்பதை மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாக்களிப்புகள் மிக தெளிவாக தெரியப்படுத்தியுள்ளதாக  இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள இ.சிறிநாத் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு,செங்கலடியில் நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், “மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியத்தினை நேசித்து தமிழரசுக்கட்சிக்கும் எனக்கும் வாக்களித்த அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றியை தெரிவிப்பதுடன் இலங்கை முழுவதுமே மாற்றம் என்ற அரசியல் புயல் வீசிக்கொண்டிருக்கின்றபோது அந்த மாற்றத்தினை தமிழ் தேசியத்தின் ஊடாக வழங்கமுடியும் என்ற நம்பிக்கையினை மக்கள் எம்மீது கொண்டிருக்கின்றார்கள்.

அந்த வகையில் முழு இலங்கைக்கும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் ஊழல் அற்ற,வன்முறையற்ற நிலைமைவேண்டும் என்பதை தெளிவாக தெரியப்படுத்தியுள்ளனர்.

கடந்த காலத்தில் நடைபெற்ற வன்முறை,ஊழல்களை மக்கள் முழுமையாக நிராகரித்துள்ளார்கள். அதனுடன் இணைந்ததாக தமிழர்களின் அபிலாசைகள் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

 

 

 

Related Post

பிரபலமான செய்தி