மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதி கிரியை தொடர்பில் தகவல்!

user 31-Jan-2025 இலங்கை 186 Views

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதி கிரியை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி  இறுதி கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (2) மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் காலை 8 மணிக்கு இடம்பெறவுள்ளது.

பின்னர், காலை 10 மணிக்கு அஞ்சலி உரைகள் அவரது இல்லத்தில் இடம்பெற்று, மதியம் ஒரு மணியளவில் மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இதேவேளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி