கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் குழப்ப நிலை !

user 23-Jan-2025 இலங்கை 667 Views

கிளிநொச்சி (Kilinochchi) நகரத்தில் இன்று (23) காலை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இதில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வீதியோரத்தில் மேற்கொள்ளப்படும் நடைபாதை வியாபாரிகளுடைய வியாபார நடவடிக்கைகளை தடை செய்யக்கோரி கிளிநொச்சி வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் கதவடைப்பும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டமானது கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து மாவட்ட செயலகம் வரை சென்று, மாவட்ட செயலகத்தில் மனு ஒன்றும் கையளிக்கப்பட இருந்தது.

இந்நிலையில், வர்த்தகர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் சிறுகுற்றப் பிரிவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் குறித்த தடை விதிக்கப்பட்டு இடையூறு ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி