கடுகன்னாவையில் இடம்பெற்ற மண்சரிவு – உயிரிழப்பு எண்ணிக்கை 6ஆக அதிகரிப்பு!

user 23-Nov-2025 இலங்கை 22 Views

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேலும் இருவரின் சடலங்கள் சற்றுமுன்னர் மீட்கப்பட்ட நிலையில்
உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

இத்தீவளை, மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் தொடர்ந்தும் பாதுகாப்பு படையினர், பொலிஸார், அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related Post

பிரபலமான செய்தி