இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட நாலரை கிலோ தங்கம் இந்தியாவில் சிக்கியது !

user 19-Nov-2024 இலங்கை 140 Views

 இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 4.5 கிலோ தங்கம் இந்தியாவின் இராமேஸ்வரத்தில் நேற்று (18.11.2024) திங்கட்கிழமை பிடிபட்டுள்ளது.

இலங்கையில் இருந்து கடல் வழியாகக் கடத்திச் செல்லப்பட்ட தங்கம், இராமேஸ்வரம் வழியாக வாகனம் ஒன்றில் கடத்திச் செல்ல முற்பட்ட சமயமே சிக்கியுள்ளது.

தங்கத்தை கடத்திச் சென்ற இருவரையும் கைது செய்த இந்திய மத்திய அரசின் சுங்கத்துறையின் புலனாய்வு அதிகாரிகள், மீட்கப்பட்ட தங்கத்தையும் கைது செய்தவர்களையும் மதுரைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

பிடிபட்ட தங்கத்தின் பெறுமதி இலங்கை நாணயத்தில் 10 கோடி ரூபா பெறுமதி எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

 

 

 

 

 

 

Related Post

பிரபலமான செய்தி