கூகுள் பயனர்களுக்கு அறிமுகப்படுத்திய புதிய அம்சம் !

user 03-Mar-2025 இலங்கை 397 Views

உலகளாவிய ரீதியில் கூகுள் பயனர்கள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், பயனர்களுக்கு ஏற்ற வகையில் நாளுக்கு நாள் புதிய தொழிநுட்பத்தை கூகுள் அறிமுகப்படுத்தி வருகின்ற நிலையில் கூகுள் நிறுவனம் தற்போது புதிய நிறுவனம் தொழிநுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதேவேளை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் தினந்தோறும் வளர்ந்து கொண்டே செல்கின்றன.

பயனாளர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை வழங்குவதில் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கிடையில் கடுமையான போட்டி நிலவுகின்றது.

அந்த வகையில், சமீபத்தில் வெளியான டீப் சீக் சாட்பாட் ஏ.ஐ உலகின் புதுவரவாக இருந்தாலும், தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது.

காரணம், இதில் தகவல்கள் சற்று தெளிவாகவும் எளிமையாகவும் கிடைப்பதனால் பயனர்கள் இதை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது கூகுளும் தனது பயனாளர்களுக்கு ‘ஆஸ்க் ஃபார் மீ' ( Ask For Me) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு வசதியை உருவாக்கி உள்ளது.

இந்நிலையில், குறித்த புதிய தொழில்நுட்பம் மிக விரைவில் நடைமுறைக்கு வரும் என கூகுள் தெரிவித்துள்ளது.

Related Post

பிரபலமான செய்தி