யாழில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடுவோரை கைது செய்ய உத்தரவு !

user 23-Jan-2025 இலங்கை 227 Views

யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களம் அறிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை பயன்படுத்தி அண்மைக்காலமாக யாழ். மாவட்ட கடற்பரப்புக்களில் பல்வேறு கடற்றொழில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மீன் வளம் குறைந்து இலங்கையின் கடல் வளம் அழிவடையும் பாதகமான நிலை உருவாகுவதால் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவோரை கைது செய்யுமாறு கடற்படை, இராணுவம், விமானப்படை, பொலிசார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோருக்கு கடிதம் மூலம் நீரியல்வளத்துறை திணைக்களம் அறிவித்துள்ளது.

அது தொடர்பான கடிதம் ஒன்றினை வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களுக்கும் தனித்தனியாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை பிரதிப் பணிப்பாளர் சுதாகரனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

குறித்த கடித்த்தில் தங்கூசி வலை, அடிமடி தொழில்(பொட்டம் ரோளர்) ஒளி பாய்ச்சி கடற்றொழிலில் ஈடுபடுதல் உள்ளடங்கலாக 14 தொழில்கள் இலங்கையில் கடற்றொழில், நீரியல் வளத்துறையால் தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Related Post

பிரபலமான செய்தி