திருகோணமலையில் நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு!

user 02-Feb-2025 இலங்கை 162 Views

திருகோணமலை கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையில், நேற்று (01.02.2025) காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நகர் கடற்பகுதியில் கடந்த வியாழக்கிழமை (30) நான்கு நண்பர்கள் கடல் குளித்துக்கொண்டிபோது கடல் அலையில் சிக்கி அனைவரும் அள்ளுண்டு சென்றுள்ளனர்.

இதில் மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன் காணாமல்போயுள்ள இளைஞனை தேடும் பணியை வியாழக்கிழமை முதல் பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையிலேயே குறித்த இளைஞனின் சடலம் கடலில் மிதந்த நிலையில் நேற்று (01) காலை மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட இளைஞன் திருகோணமலை சீனக்குடா பகுதியை சேர்ந்த 20 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Related Post

பிரபலமான செய்தி