சோளப் பைக்குள் விநாயகர் !

user 17-Mar-2025 இலங்கை 104 Views

மன்னாரில் இருந்து கொழும்புக்கு சென்ற பேருந்தில்  பெறுமதியான விநாயகர் சிலையை மக்காச்சோளப் பையில் மறைத்து வைத்திருந்த  சந்தேக நபர் ஒருவர், முருங்கன் பகுதியில் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் 36 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்  விநாயகர் சிலையை மக்காச்சோளம் நிரப்பப்பட்ட பையில் மறைத்து வைத்து கொழும்பு பகுதிக்கு விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்றதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிலை தங்கமா என்பதை சரிபார்க்க சந்தேக நபர் சிலையின் மூக்கு மற்றும் கைகளை உடைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடம் மேலும் விசாரித்தபோது, ​​அவர் தனது மாமாவிடமிருந்து சிலையைப் பெற்றதாகக் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

பிரபலமான செய்தி