நாட்டை வந்தடைந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல் !

user 03-Jan-2025 இலங்கை 825 Views

இந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒஷனியா ரிவேரா என்ற இந்த அதிசொகுசு ரக கப்பல் மாலி இராஜ்ஜியத்தில் இருந்து, நேற்று(02) கொழும்பை வந்தடைந்துள்ளது.

இந்த கப்பலில் 1,185 பயணிகள் மற்றும் 750 பணிக்குழாமினர் வருகை தந்ததுடன், அவர்கள் கொழும்பு, களனி ரஜமஹா விகாரை, பின்னவல யானைகள் சரணாலயம் ஆகியவற்றை பார்வையிடுவதற்காக சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், Aitken Spence Travel பயண நிறுவனத்தின் தலையீட்டுடன் நாட்டை வந்தடைந்துள்ள குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

பிரபலமான செய்தி