ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம்!

user 20-Nov-2024 இலங்கை 1320 Views

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) இந்தியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்வதற்காக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விஜயமானது நாளை (21.11.2024) இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது ரணில் விக்ரமசிங்க மத்திய இந்தியாவின் இந்தூரில் உள்ள ஸ்ரீ சத்ய ஸ்ரீ வித்யா விஹார் உயர்கல்வி நிறுவனத்தில் விரிவுரை ஒன்றையும் நடத்த உள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) மாலை 6 மணிக்கு உயர்கல்வி நிறுவன மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதன்படி முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் 30ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது.

Related Post

பிரபலமான செய்தி