தமிழர் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் உடலம் மீட்பு (வவுனியா, ஈரற்பெரியகுளம்)

user 25-Feb-2026 இலங்கை 75 Views

வவுனியா, ஈரற்பெரியகுளம் மயானப் பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் உடலம் நேற்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஈரற்பெரியகுளம் மயானத்தில் உடலம் ஒன்று காணப்படுவதாக நேற்று காலை காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டது.

மேலதிக விசாரணை

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன் போது சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

 

உயிரிழந்தவரின் உடலின் ஒரு பகுதி தீயினால் எரிந்த நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட உடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

மரணத்திற்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து ஈரற்பெரியகுளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

பிரபலமான செய்தி