பாகிஸ்தானிலும், துபாயிலும் நடைபெறும் செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் அணி, இங்கிலாந்து அணியை 8 ஓட்டங்களால் தோற்கடித்தது.
ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 25 ஓட்டங்களை பெற்றது.
இதில் எல். சட்ரான் 177 ஓட்டங்களை எடுத்தார். இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி இறுதி வரை போராடி தோற்றது.
இதன்படி இங்கிலாந்து அணி, 49.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 317 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, போட்டியில் தோல்வி அடைந்தது.
அந்த அணியின் சார்பில் ஜெ ரூட் 120 ஓட்டங்களை எடுத்தார். பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணியின் ஓமர்சாய் 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.