பிரித்தானியா (Britian) மற்றும் பிரான்ஸ் (France) ஆகிய நாடுகளை அச்சுறுத்தும் வகையில் நவீன ஏவுகணைகளைக் கொண்ட ரஷ்ய கப்பலொன்று ஆங்கிலக் கால்வாயை கடந்து சென்றுள்ளது.
பிரித்தானியாவின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் (Emmanuel Macron) ஆகியோர் உக்ரைனுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயார் என நேற்று (11.11.2024) உறுதியளித்திருந்தனர்.
இந்நிலையில், ஆங்கிலக் கால்வாயை அதிநவீன ரஷ்ய கப்பல் கடந்து சென்றிருப்பது இரு நாடுகளுக்குமான அச்சுறுத்தலாகவே கருதப்படுகின்றது.
அட்மிரல் கோலோவ்கோ (Admiral Golovko) என அழைக்கப்படும் இந்த கப்பலானது நீண்ட தூர பயணம் மேற்கொள்வதன் ஒருபகுதியாக ஆங்கிலக் கால்வாயை கடந்துள்ளது.
இந்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ள நவீன ஏவுகணைகள் ஒலியை விட பல மடங்கு வேகத்தில் பயணிக்க கூடியதென தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், ரஷ்ய அரசாங்கத்தின் புதிய திட்டத்தின் அடிப்படையில் உருவாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ள 10 கப்பல்களில் ஒன்றான இதனை சுட்டு வீழ்த்துவது கடினம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.