நாட்டிலுள்ள அனைத்து சுயாதீன நிறுவனங்களையும் அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயல்கின்றது என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக என இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை தற்போதைய அரசாங்கமானது கடந்த கால அரசாங்கங்களின் கொள்கைகளையே தான் பின்பற்றி வருகின்றது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அரசியலமைப்பு விடயத்திலே எதுவுமே இடம்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.