யாழ்ப்பாணம் உழவு வண்டியில் சிக்குண்டு 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் உடுவில் கற்பமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்று (03) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுவனின் தந்தை வீட்டிலிருந்து உழவு வண்டியை பின் பக்கமாக வெளியே எடுக்க முயன்றுள்ளார்.
இதன்போது, உழவு வண்டிக்குப் பின்னால் இருந்த சிறுவன் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு உயிரிழந்தான்.
குறித்த சிறுவனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.