யாழில் துயரத்தை ஏற்படுத்திய ஆசிரியையின் மரணம்

user 11-Dec-2025 இலங்கை 37 Views

யாழ்ப்பாணம் ஹாட்லிக்கல்லூரியின் தமிழ் ஆசிரியை ஒருவர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து உயிரிழந்துள்ளார்.

43 வயதான நிஷாந்தினி நித்திலவர்ணன் என்பவரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பருத்தித்துறைஆதாரவைத்தியசாலையில்அனுமதிககப்பட்டமேலதிகசிகிச்சைக்காக யாழ் போதனாவைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிககப்பட்டார் , எனினும் இன்றைய தினம் காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் இரு பிள்ளைகளின் தாயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சடலம் கூற்றுச் சோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

பிரபலமான செய்தி