இலங்கையில் புதிதாக திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு மகிழ்ச்சி தகவல்

user 05-Aug-2025 இலங்கை 103 Views

இலங்கையில் புதுமணத் தம்பதிகளுக்கு வீடு வழங்கும் திட்டம் அரசாங்கத்தால் செயற்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்குபற்றி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

திருமணத்திற்குப் பின்னர் தங்கள் சொந்த வீட்டில் வாழ விரும்பும் இளம் தலைமுறையினரின் கனவை இந்த திட்டம் நிறைவேற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் உள்ள வீட்டு வசதி பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில் அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குள் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், புதிய வீடுகளைக் கட்ட அரச ஊழியர்களுக்குக் கடன் வழங்கும் திட்டமும் அரசாங்கத்திடம் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post

பிரபலமான செய்தி