ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் டொனால்ட் ட்ரம்ப் !

user 20-Jan-2025 சர்வதேசம் 252 Views

அமெரிக்காவின்(us) 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் (donald trump)இன்று(20) வோஷிங்டனில் உள்ள கேப்பிடல் எனப்படும் நாடாளுமன்றக் கட்டடத்தில் பதவியேற்க உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிகழ்வில் பாரம்பரியமாக, துணை ஜனாதிபதியின் பதவியேற்பு, ஜனாதிபதியின்பதவியேற்பு, ஜனாதிபதியின் தொடக்க உரை, முந்தைய ஜனாதிபதியின் புறப்பாடு, ஜனாதிபதி பதவிப் பிரமாணத்தில் கையொப்பமிடும் நிகழ்வு, மதிய உணவு ஆகியவை இடம்பெறும்

நியூயோர்க்கின் பேராயர் கர்தினால் டிமோதி டோலன் பதவியேற்பு விழா பிரார்த்தனைக்கு தலைமை வகிப்பார். வோஷிங்டன் டிசியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகியவற்றின் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் மட்டுமின்றி, இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வர தொழிலதிபர்கள் எலோன் மஸ்க் (இவர் டிரம்ப் நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ளார்), மார்க் ஸுக்கர்பெர்க், ஜெஃப் பெசோஸ் உள்ளிட்டோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

Related Post

பிரபலமான செய்தி