இந்திய பிரதமர் இலங்கை வருகிறார் !

user 09-Mar-2025 இலங்கை 207 Views

இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி இலங்கைக்கு தரவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  ஆகியோரை கொழும்பில் சந்திக்க உள்ளதுடன் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளார்.

பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க உள்ளமையும் குறிப்பிடதக்கது.

இந்த சந்திப்பை உறுதி செய்யும் வகையில் கடந்த வியாழக்கிழமை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,  ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடி இருந்தமை குறிப்பிடதக்கது.

Related Post

பிரபலமான செய்தி