வங்கக்கடலில் நிலநடுக்கம்!

user 25-Feb-2025 இலங்கை 114 Views

வங்கக்கடலில் இன்று காலை 6.10 மணியளவில் நிலநடுக்கமொன்று  ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவு கோலில்  5.1 ஆகப்  பதிவாகியுள்ளது.

மேற்குவங்காள தலைநகர் கொல்கத்தாவில் இருந்து 340 கிலோமீற்றர் தொலைவில் வங்கக்கடலில் 91 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் இந்த நில நடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Post

பிரபலமான செய்தி