பஸ் கட்டணங்களை ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க பஸ் கட்டணங்களை 2. 5 வீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வருடாந்தம் ஜூலை மாதத்தில் பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இந்த வருடத்தின் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் இந்த திருத்தம் நடைமுறைக்கு வருகிறது.எவ்வாறெனினும் தற்போது நடைமுறையிலுள்ள ஆகக் குறைந்த பஸ் கட்டணத்தில் எந்த திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.