கிளிநொச்சி (Kilinochchi) - தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (4) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, படுகாயமடைந்தவர்கள் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் தருமபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.