திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம்

user 04-Oct-2025 இலங்கை 100 Views

  தமிழ் மக்களுக்காய் உயிர்நீத்த திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என இலங்கைத் தமிழரசுக்கட்சி வலியுறுத்தியுள்ளது. தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் இதனை வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பின்போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

பொருத்தமான அரசியல் கலப்பற்ற நினைவேந்தல் கட்டமைப்பை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போது தீபங்களுக்கு முன்பாக தலை குனிந்து நிற்பவர்கள் தம்மை தியாகிகளாக நினைக்கின்றனர்.

இதில் யார் யார்? இராணுவப் புலனாய்வுடன் தொடர்பு கொண்டவர்கள் என்பது தனக்கு தெரியும் எனவும், சீ.வீ.கே சிவஞானம் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

Related Post

பிரபலமான செய்தி