நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வீணைச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற வாராந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ஈ.பி.டி.பி தனது தனித்துவத்துடனேயே அனைத்து தேர்தல்களிலும் முகங்கொடுத்து வருகின்றது.
குறிப்பாக வடக்கின் ஐந்து மாவட்டங்கள் கிழக்கில் மூன்று மாவட்டங்கள் உள்ளடங்கலாக வடக்கு கிழக்கில் உள்ள உள்ளூராட்சி தேர்தலில் ஈ.பி.டி.பி தனது சின்னமான வீணைச் சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளது.
அதனடிப்படையில் தேர்தல் எமது மக்கள் எமது கட்சிக்கு அணிதிரண்டு வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகின்றேன்“ என ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.