கனடா ஒட்டாவா பகுதியில் இலங்கையைச் சேர்ந்த தாயும், 4 குழந்தைகளும் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 மார்ச் 06ஆம் திகதி இலங்கை குடும்பத்தை கத்தியால் குத்தி கொலை செய்த குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு, நேற்று ஒட்டாவா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தம்மீது சுமத்தப்பட்ட 06 குற்றச்சாட்டுக்களில், 04 குற்றச்சாட்டுக்களை இலங்கையரான சந்தேகநபர் டி சொய்சா ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் வருமாறு:
தாய் – தர்ஷனி பண்டாரநாயக்க – 35 வயது
இனுக விக்ரமசிங்க – 07 வயது
அஸ்வினி விக்ரமசிங்க – 04 வயது
றின்யானா விக்ரமசிங்க – 02 வயது
கெலீ விக்ரமசிங்க – 02 மாதங்கள்காமினி அமரகோன் என்ற 40 வயதுடைய குடும்ப நண்பரே கொல்லப்பட்ட மற்றைய நபராவார்.
இந்த சம்பவத்தில் பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்ததுடன் அவரது பெயர் தனுஷ்க விக்ரமசிங்க எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபருக்கு, குறைந்தபட்சம் 25 வருடங்களுக்கு பரோலில் வர முடியாத வகையில் நீதிமன்றம் அதன் தீர்ப்பில் அறிவித்துள்ளது.
கனடாவில் கல்வி கற்கும் பெப்ரியோ டி சொய்சா (Febrio De-Zoysa) என்ற இலங்கையருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தது.
குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் கொலை செய்யப்பட்ட குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
சுமார் மூன்று தசாப்தங்களில் ஒட்டாவாவில் இவ்வாறான ஒரு கொலை இடம்பெற்றது இதுவே முதல் தடவை என ஒட்டாவா மேயர் குறிப்பிட்டிருந்தார்.
கொலை இடம்பெற்ற தினத்திலேயே சந்தேகநபரான சொய்ஷா கைது செய்யப்பட்டார்.
மாணவர் விசா காலம் நிறைவடைந்த நிலையில் கனடாவில் தங்கியிருந்த சொய்ஷா, தன்னிடம் பணம் இல்லாது போனமையால் கொலையை செய்ய எத்தனித்ததாக ஆரம்பத்தில் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.