யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியைச் சேர்ந்த ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் (17) என்ற சிறுவன், கடலட்டைப் பண்ணைக்குக் காவலுக்குச் சென்ற நிலையில் இன்று காலை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கடலட்டைப் பண்ணையின் பாதுகாப்புப் பணிக்காக சென்ற சிறுவன், காலையில் கரைக்கு திரும்பாததால் காணாமல் போனதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் இணைந்து தீவிரமான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
அதில், சிறுவனின் சடலம் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.
சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் உடற்கூற்று பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறார்கள்.
இந்த துயரச் சம்பவம், குருநகர் பகுதியை முழுவதுமாக அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.