தொடரும் சர்வதேச நீதி கோரி கையெழுத்து போராட்டம்...

user 02-Sep-2025 இலங்கை 59 Views

யாழ்ப்பாணம் செம்மணிப் புதைகுழி, வடக்கு - கிழக்கு மண்ணில் உள்ள மனிதப் புதைகுழிக்கான நீதிக்காகவும், நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் கடந்த 29ம் திகதி ஆரம்பமாகியது.

இந்நிலையில், நேற்றையதினம் (02) பளை நகரப் பகுதியில் காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகிய இந்த கையெழுத்து வேட்டை இன்றையதினமும் மிகவும் இடம்பெற்றது வருகிறது.

இவ் கையெழுத்து போராட்டமானது தமிழ் தேசிய கட்சிகளினதும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருகிறது.

இன்றைய கையெழுத்து போராட்டத்தில் பளை பிரதேச சபை உறுப்பினர் ஈஸ்வரன் டாயாளினி, சுபாஸ்கரன் சுஜீபா, மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் கணைச்செல்வன், பொதுமக்கள் மற்றும் சகோதர மொழியினத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Post

பிரபலமான செய்தி