கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அது தொடர்பில், கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதானவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் உயிர் மீட்பு பிரிவினர், கடற்படை உயிர் மீட்பு பிரிவினர், பிரதேவாசிகள் இணைந்து காணாமல் போனவரை தேடும் பணியை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.