இணையத்தில் விற்பனை செய்யப்படும் பெண்களின் தகாத புகைப்படங்கள்

user 31-Jul-2025 இலங்கை 113 Views

டெலிகிராம் சமூக ஊடகக் கணக்கு மூலம் பெண்கள் மற்றும் இளம் பெண்களின் தகாத புகைப்படங்களை விற்பனை செய்த சம்பவம் குறித்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

சமூக ஊடகங்கள் மூலம் பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான தகவலை சமூக ஊடக ஆர்வலர் சான்யா ஹேரத் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் தனது சகோதரியின் புகைப்படங்களை பணத்திற்காக விற்பனை செய்யும் நபர் தொடர்பில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

டெலிகிராம் கணக்கில் உள்ளவர்களுக்கு தகாத புகைப்படங்களை அனுப்பி Easy Cash மூலம் பணம் பெறுவதாக அவர் தனது சமூக ஊடகக் கணக்கில் எச்சரித்திருந்தார்.

இந்த விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் அதிகளவாக பேசப்பட்டு வருவதுடன் பெண்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

 

எச்சரிக்கை

இதுபோன்ற பின்னணியில், இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக குறித்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரீத்தி இனோகா ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் சமூக வலைத்தளங்களில் தமது புகைப்படங்களை பகிரும் பெண்கள் மற்றும் யுவதிகள் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Related Post

பிரபலமான செய்தி