வடமாகாணத்தின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதிக்கு ZOOM ஊடான கலந்துரையாடல்

user 02-Dec-2025 இலங்கை 32 Views

வடக்கு மாகாணத்திற்கான அவசர தேவைகள் மற்றும் வடக்கு மாகாணத்தில் நிலவுகின்ற பிரச்சனைகள் தொடர்பான பட்டியலை தயாரித்து ஜனாதிபதி செலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு ZOOM செயலி ஊடான கலந்துரையாடலில் ஜனாதிபதி வடக்கு மாகாண ஆளுநருக்கு பணிப்புரை விடுத்திருந்த நிலையில் பட்டியல் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தை விடவும் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மின்சாரம், குடிநீர் போன்றன முல்லைத்தீவில் மிகவும் பிரச்சினையாக உள்ளதாகவும் குறித்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்னாரில் பிரதான வீதிகளில் பயணம் செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் முல்லைத்தீவிற்கு தொலைத்தொடர்பு சேவை வழமைக்கு திரும்பவில்லை எனவும் வடக்கில் 159 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு பலர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும்
எனினும் நாளை அவர்கள் வீடுகளுக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுவதக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

பிரபலமான செய்தி