மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

user 11-Mar-2025 இலங்கை 43 Views

2024 (2025) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் பரீட்சார்த்திகளுக்கான அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், பயிற்சிப் பட்டறைகள் என்பன இன்று (11) முதல் தடைசெய்யப்பட்டுள்ளன.

இந்தத் தடை 2025 மார்ச் 11 நள்ளிரவு முதல் குறித்த பரீட்சைகள் நிறைவு பெறும் வரை அமலில் இருக்கும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2024 (2025) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மார்ச் 17 முதல் 26 வரை 3663 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு 474,147 பரீட்சார்த்திகள் பரீட்சை எழுத தகுதி பெற்றுள்ளனர்.

மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக பரீட்சை அனுமதி அட்டைகள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையர் நாயகம் அமித் ஜெயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த பரீட்சைக்காக மார்ச் 11 ஆம் திகதிக்கு பின்னர் நடத்தப்படும் எந்தவொரு மேலதிக வகுப்புகள் மற்றும் விரிவுரைகள் தொடர்பில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேற்கண்ட திகதிக்கு அப்பால் நடைபெறும் எந்தவொரு கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள், பட்டறைகள் அல்லது ஆன்லைன் அமர்வுகள் குறித்து பின்வரும் தொடர்பு எண்கள் மூலம் தெரிவிக்கலாம் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

  • பொலிஸ் தலைமையகம் – 0112421111
  • பொலிஸ் அவசர துரித எண் – 119
  • இலங்கை பரீட்சைகள் திணைக்களம் – 1911
  • மேலும் – 011 278 4208 / 011 278 4537

Related Post

பிரபலமான செய்தி