நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுவதற்காக, பல்வேறு தரப்பினரும் அமைப்புகளும் தமது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
அவ்வாறு பங்களிப்புச் செய்யும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தாராள மனப்பான்மை கொண்ட நன்கொடையாளர்களின் நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், அரசாங்கத்தினால் சில வங்கிக் கணக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் நிதிப் பங்களிப்புகளுக்கு மட்டுமே கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு உள்ளிட்ட அரசாங்கத்தின் அமைச்சுக்கள் நேரடியாகப் பொறுப்புக்கூரும் .
நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் வேறு எந்தவொரு அமைப்பு அல்லது தனியாரின் வங்கிக் கணக்குகளுக்கு இந்த அமைச்சு அனுமதியோ,அங்கீகாரமோ வழங்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தக் இக்கட்டான தருணத்தில் மக்கள் வழங்கி வரும் பங்களிப்பைப் பாராட்டும் அதே வேளை, மாணவர்களுக்கான நிதிப் பங்களிப்புகளை பெற்றுக்கொடுக்கும் போது, அதன் நம்பகத்தன்மை குறித்து மக்கள் கவனத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அரசாங்கத்தின் வங்கிகணக்குப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு www.donate.gov.lk பிரவேசித்து உங்களால் முடிந்த பங்களிப்பை செய்யுங்கள்.