பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பில் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதற்கமைய நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் சில மாவட்டங்களில் 40 சதவீத வாக்கிற்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கம்பஹா, நுவரெலியா, திருகோணமலை, பதுளை, அனுராதபுரம் மாவட்டங்களில் அதிகளவான வாக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.
பத்தாவது நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது.
காலை வேளையில் அதிகளவான மக்கள் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்து வருகின்றனர்.
நண்பகல் 12.00 மணிவரையான காலப்பகுதியில்,
- கொழும்பில் 20 வீத வாக்குகளும்,
- களுத்துறையில் 20 வீத வாக்குகளும்,
- நுவரெலியாவில் 40 வீத வாக்குகளும்
- யாழ்ப்பாணத்தில் 16 வீத வாக்குகளும்,
- கிளிநொச்சியில் 25 வீத வாக்குகளும்
- முல்லைத்தீவில் 23 வீத வாக்குகளும்
- வவுனியாவில் 25 வீத வாக்குகளும்
- கண்டியில் 30 வீத வாக்குகளும்
- பதுளையில் 41 வீத வாக்குகளும்
- இரத்தினபுரியில் 35 வீத வாக்குகளும்
- மட்டக்களப்பில் 32 வீத வாக்குகளும்
- அம்பாறையில் 37 வீத வாக்குகளும்
- திகாமடுல்லயில் 18 வீத வாக்குகளும்
- பொலநறுவையில் 23 வாக்குகளும்
- ஹம்பாந்தோட்டையில் 25 வீத வாக்குகளும்
- மொனராகலையில் 37 வீத வாக்குகளும்
- குருணாகலில் 28 வீத வாக்குகளும்
- மாத்தளையில் 24 வீத வாக்குகளும்
- மாத்தறையில் 34 வீத வாக்குகளும்
- புத்தளத்தில் 30 வீத வாக்குகளும்
- மன்னாரில் 28 வீத வாக்குகளும்
- கேகாலையில் 32 வீத வாக்குகளும்
- அனுராதபுரத்தில் 40 வீத வாக்குகளும்
- கம்பஹாவில் 20 வீத வாக்குகளும்
- திருகோணமலையில் 45 வீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.
காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்கு பதிவு இடம்பெறும்.