நுவரெலியாவில் மண் சரிவின் பின் அந்தரிக்கும் மக்கள்...

user 29-Dec-2025 இலங்கை 38 Views

  நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியோரத்தில் பிளக்பூல் ரூவான் எலிய சில்வர் போல் ஹோட்டல் அருகில் சமீபத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி மூவர் உயிரிழந்தனர்.

அந்த சோகம் மறைவதற்குள் அதனை அண்மித்து மேல் பகுதியில் வாழும் மூன்று குடும்பங்களை சேர்ந்த 16 பேர் குறித்த மண் சரிவால் அவர்கள் முன்பு பயணித்த படிக்கட்டுகள் இடிந்து விழுந்து சேதமாகியுள்ளது.

இதனால் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக இரண்டு ஏணிகளை ஏறி சென்று வருவது அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது. தற்போது இந்த அப்பகுதி மக்களின் தினசரி வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது.

பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் குறித்த ஏணியில் ஏறி ஆபத்தான நிலையில் பயணம் செய்வதற்கு பெரும் போராட்டத்தைச் சந்திக்கின்றனர்.

பாரிய மண்சரிவால் சிறுவர்கள் ஆபத்தான இடிபாடுகளைக் கடந்து தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள ஏணியில் ஏறி, உயிரைப் பணயம் வைத்து சென்று வருகின்றனர், மழைக் காலங்களில் இரும்பு ஏணி அதிகம் வழுக்கும் தன்மை கொண்டுள்ளதால் தவறி விழுந்தால் உயிர் போகும் வாய்ப்புகள் உள்ளது.

எதிர் வரும் நாட்களில் மழைக் பெய்தால் இப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு பாரிய மண் மற்றும் கற்பாறைகள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமது அவல நிலை தொடர்பில் பலமுறை புகார் தெரிவித்தும் அவர்கள் பாராமுகமாகவே உள்தாக தெரிவிக்கும் மக்கள், அசம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன் பாதுகாப்பாக தங்கள் பிரதான வீதியில் இருந்து வீட்டுக்கு பயணம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Related Post

பிரபலமான செய்தி