யாழ்ப்பாணம் நயினாதீவு – குறிகட்டுவான் தனியார் படகுச் சேவை இன்றையதினம் (8) வியாழக்கிழமை இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தலுக்கமைய குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நயினாதீவுக்கு பயணிக்கும் பயணிகள் இதனை கவனத்தில்கொண்டு செயற்படுமாறு நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.