டெல்லியில் தீவிரமடைந்து வரும் காற்று மாசுபாடு!

user 20-Dec-2024 இந்தியா 1128 Views

டெல்லியில் நிலவி வரும்  காற்று மாசுபாடு  காரணமாக  பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

டெல்லியில் பல இடங்களில் காற்றின் தரக்குறியீட்டு எண் 400 புள்ளிகளுக்கு மேல் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக துவாரகாவில் காற்றின்  தரக்குறியீட்டு எண் 460-ஐ தாண்டியுள்ளதாகவும்,தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றை விடவும் இது சுகாதார ரீதியாக பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை உலக சுகாதார ஸ்தாபனம் நிர்ணயித்துள்ள பாதுகாப்பு எல்லையை விடவும் டெல்லியில்  காற்றின் தரம் 35 மடங்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  இதனால் மக்களுக்கு மூச்சுத் திணறல், கண்கள் மற்றும் தொண்டையில் அரிப்பு போன்ற பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சிறுவர்கள் மற்றும் முதியவர்களை முடியுமான அளவு வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு வைத்தியர்கள்  அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி